2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புத்தளம் லிவர்பூல் அணி வெற்றி

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்ப்பந்தாட்ட சங்கம் புத்தளத்தில் நடாத்தி வரும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்ப்பந்தாட்ட தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் புத்தளம்  லிவர்பூல் அணி  வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியானது புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (23) மாலை இடம்பெற்றது.

லிவர் பூல் அணியோடு புத்தளம் ட்ரிபிள் செவன் அணி எதிர்த்தாடியது. கடந்த இரண்டாவது போட்டியில் தமது அபார திறமைகளை அணியின் வீரர்கள் வெளிப்படுத்தியதன் மூலம் வெற்றியடைந்த  ட்ரிபல் செவன் அணி இந்த மூன்றாவது போட்டியில் லிவர்பூல் அணியின் அதிரடியான  ஆட்டத்தின் முன் துவண்டு போனது.

லிவர்பூல் அணிக்காக நொத்தாஸ் ரிழ்வான் மற்றும் ஐதுரூஸ் முஹம்மத்  ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொடுத்ததன் மூலம் 02 கோல்களினால் லிவர்பூல் அணி  வெற்றி பெற்றது. இதன் மூலம் அவ்வணி மொத்தமாக 04 புள்ளகளை பெற்றுக்கொண்டுள்ளது.

போட்டிக்கு நடுவர்களாக ஏ.எம். பஸ்ரின், எம். ஆர். எம். அம்ஜத், எம்.எஸ்.எம். ஜிப்ரி ஆகியோர் கடமையாற்றினர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .