2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நிலாவெளி கைலேஸ்வரா அணி வெற்றி

Super User   / 2014 மே 27 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயம். நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி என்பன தமக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக  பற்றல் ஒல் த வில்ஸ் Battle of the Wills என்னும் பெயரில் வருடாந்தம் நடாத்திவரும் கிரிக்கெட் போட்டி, நான்காவது வருடமாக ஞாயிற்றுக்கிழமை (25) சாம்பல்தீவ தமிழ் மகா வித்தியாலயத்தினரால் ஆத்திமேடு அ.த.க. பாடசாலை மைதானத்தில் நடத்தப்பட்டது.

திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ந.விஜேந்திரன் பிரதம அதிதியாக இதில் கலந்து சிறப்பித்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி (நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம்) அணியினர் நிர்ணயிக்ப்பட்ட 20 பந்து பரிமாற்றங்களில் 9 இலக்குகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களைப் பெற்றனர். வி.தனுசன் 51 ஓட்டம், ச.சந்தொஷ் 28, வி.வினோத் 24, எஸ்.நிமலகாந் 16 ஓட்டங்களைப் பெற்றுக் கொடத்தனர். பதிலுக்கு களம் இறங்கிய  சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலய அணியினர் 15.4  பந்து பரிமாற்றங்களில் 92 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .