2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

லைற்ஹவுஸ் கழகத்தின் கால்பந்தாட்ட போட்டி; யங்ஸ்டார் சம்பியன்

Super User   / 2014 மே 27 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் 43ஆவது அண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில்  மட்டக்களப்பு சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழக அணியினர் முதலாம் இடத்தினைப் பெற்று சம்பியனாக தெரிவாகியதுடன் இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு மைக்கள்மென் விளையாட்டுக் கழகமும், மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு கோள்ட்பிஷ் விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் 43ஆவது அண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட நொக்கவுட் முறையிலான அணிக்கி ஏழுபேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைற்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (24,25) நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் மற்றும் மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் என்.ரி.பாறுக் ஆகியோரும்  கௌரவ அதிதிகளாக பாலமீன்மடு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சத்துரதம்மசேனா, கிராம உத்தியோகத்தர் ஏ.நேசதுரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவ் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 34 கழகங்கள் பங்குபற்றிய நிலையில் மட்டக்களப்பு சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழக அணியினர் முதலாம் இடத்தினைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு மைக்கள்மென் விளையாட்டுக் கழகமும், மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு கோள்ட்பிஷ் விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டது.

யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக 1ஆம் இடத்தினை தொடர்ச்சியாக பெற்று சம்பியனாக திகழ்கின்றது.

வெற்றிபெற்ற முதல் மூன்று கழகங்களுக்கும் பணப்பரிசுகளும் கேடயங்களும் பரிசாக வழங்கப்பட்டதுடன்  நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்ற கழகங்களுக்கு கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டது. 










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .