2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஈ.பி.எல் கிரிக்கெட் போட்டி; றோயல்ஸ் அணி வெற்றி

Super User   / 2014 மே 27 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


திருக்கோவில் பிரதேச தம்பட்டை இலெவன் ஸ்டார் நடாத்திய ஈ.பி.எல். மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் றோயல்ஸ் கழகம் 71 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

ஈ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத் தொடரானது கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெறுவதுடன் சுமார் 45 சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றது.

இப்போட்டியில் கோமாரி, தாண்டியடி, விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில், ஆலையடிவேம்பு, கோளாவில் மற்றும் பனங்காடு ஆகிய பிரதேசங்களை ஒன்றினைத்த விளையாட்டு வீரர்கள், 5 கழகங்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.

இதன் இறுதிநாள் நிகழ்வுகள் சனிக்கிழமை(24) மாலை தம்பட்டை இலெவன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ப்ரேட்டஸ் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது, 10 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 8 இலக்குகளை இழந்து 70 ஓட்டங்களை பெற்றது.  71 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆட்டத்தை தொடங்கிய றோயல்ஸ் அணியினர் 10 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 5 இலக்குகளை இழந்து 71 ஓட்டங்ளைப் பெற்று வெற்றி கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

இந்த இறுதிநாள் நிகழ்வில் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கான வெற்றி கிண்ணத்தை வழங்கி வைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .