2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சென்றலைட்ஸ், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், பற்றீசியன் அணிகள் வெற்றி

Super User   / 2014 மே 27 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


- குணசேகரன் சுரேன்


யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் துடுப்பாட்டப் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற போட்டிகளில் சென்றலைட்ஸ், ஸ்கந்தா ஸ்ரார்ஸ் மற்றும் பற்றீசியன் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

யுவ பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி கடந்த 10 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன.

யாழ்;ப்பாணத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியின் முதற்சுற்றுப்போட்டிகள் தற்போது லீக் முறையில் இடம்பெற்று வருகின்றன.

இறுதி வரை போராடி வென்ற ஸ்கந்தா ஸ்ரார்ஸ்

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியினை 1 இலக்கால் வென்றது ஸ்கந்தா ஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழக அணி.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி 19.4 பந்துபரிமாற்றங்களில் 100 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பி.பங்குஜன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணி சார்பாக எஸ்.ஜனக்ஸன் 4, எஸ்.விஸ்ணுப் பிரகாஸ், என்.துபீசன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

101 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணி இறுதி வரை போராடி இறுதிப் பந்தில் ஒரு இலக்கு மீதமிருக்க வெற்றியினை அடைந்தது. துடுப்பாட்டத்தில் என்.துபீசன் 12 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி சார்பாக இ.இராகுலன் 4, எம்.சாம்பவன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக என்.துபீசன் தெரிவு செய்யப்பட்டார்.

அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியினை எளிதாக்கிய சென்றலைட்ஸ்

வடக்கின் மாபெரும் போரின் அணிகளான சென்றலைட்ஸ் அணிக்கும் ஜொனியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் அதிரடி ஆட்டத்தின் மூலம் 8 இலக்குகளால் சென்றலைட்ஸ் அணி வெற்றி.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கிணங்கக் களமிறங்கிய ஜொனியன்ஸ் அணி, 19 பந்துபரிமாற்றங்களில் 102 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் வி.விதுசன் 12 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக ஜெரிக் துசாந்தன் 3, என்.கிஷhந்தன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

103 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி, 11.2 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் எஸ்.வதூஸனன் ஆட்டமிழக்காமல் 52, ஜெரிக் துஷhந்தன் 12 ஓட்டங்களைப் பெற்றனர்.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்கரராக எஸ்.வதூஸனன் தெரிவு செய்யப்பட்டார்.

இலகுவில் வெற்றிபெற்ற பற்றீசியன் அணி

பற்றீசியன் விளையாட்டுக்கழக அணிக்கும் யங்ஸ்ரார்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் பற்றீசியன் அணி 28 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன் அணி 19.4 பந்துபரிமாற்றங்களில் 166 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் என்.அஜித்டர்வின் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் யங்ஸ்ரார்ஸ் அணி சார்பாக கே.கமலக்ஸன், என்.முகுந்தன், ரி.குமுதன், எஸ்.சயந்தன் ஆகியோர் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

167 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யங்ஸ்ரார்ஸ் அணி, 17.3 பந்துபரிமாற்றங்களில் 138 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்து தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் றொபேர் றிசான் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பற்றீசியன் அணி சார்பாக எஸ்.நோபேர்ட் 3 மற்றும் என்.கிளின்டன், எஸ்.லிவிங்டன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பற்றீசியன் அணியின் என்.அஜித்டர்வின் தெரிவு செய்யப்பட்டார்





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .