2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சமநிலையில் முடிவடைந்த துடுப்பாட்டப் போட்டி

Super User   / 2014 மே 27 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

இலங்கைத் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் 15 வயதுப்பிரிவு துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் 50 பந்துபரிமாற்றங்கள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் சென்ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த போட்டி திங்கட்கிழமை (26) சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் அணி 43.2 பந்துபரிமாற்றங்களில் 159 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.றெமிங்ரன் 31, என்.மதீசன் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், உதிரிகளாக 38 ஓட்டங்கள் கிடைத்தன.

பந்துவீச்சில் யூனியன் கல்லூரி அணி சார்பாக, என்.பிரகாஸ் 3, எம்.பமிங்ரன், என்.தேனுஜன், எல்.லவன்ராஜ் ஆகியோர் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

160 என்ற வெற்றிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யூனியன் கல்லூரி அணி, 48.2 பந்துபரிமாற்றங்களில் 159 ஓட்டங்களுக்குள்  அனைத்து இலக்குகளையும் இழந்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. துடுப்பாட்டத்தில் என்.தேனுஜன் 25, எஸ். மதீசன் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன், உதிரிகளாக 77 ஓட்டங்கள் பெறப்பட்டன.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக, எஸ்.செந்தூரன் 3, எஸ்.ஜெயசுரன், என்.மதீசன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .