2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வீரர்களை இனங்காணும் கிரிக்கெட் பயிற்சி முகாம்

Super User   / 2014 மே 28 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
, ரீ.எல்.ஜவ்பர்கான்

தேசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இலைமறை காயாகவுள்ள கிரிக்கெட் வீரர்களை தேசிய ரீதியில் அறிமுகப்படுத்தும் வகையில் திறமையாளர்களை இனங்காணும் பயிற்சி முகாம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை (28) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன் ஆரம்ப வைபவம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவர் என்.வி.ரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பயிற்சியாளர் குழாமின் முகாமையாளர் சுனில் பெர்னாண்டோ,இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரரான ஹசான் திலகரட்ன, ரவீந்திரபுஸ்பகுமார, லங்கா டி சில்வா, ஹெலன் டி மெல் உட்பட பல பயிற்சியாளர்கள் கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண பயிற்சியாளர்களான  மஞ்சுள கருணாரட்ன, அன்வர் டீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 70பேர் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டதுடன் ஆண்கள்,பெண்கள் ரீதியான பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டன.

இந்த பயிற்சி முகாமில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு, தேசிய ரீதியில் அணிகளுக்கு செல்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என, கிழக்கு மாகாண பயிற்சியாளர் அன்வர்டீன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்து யுத்த சூழ் நிலை காரணமாக திறமையானவர்களை வெளிக்கொணர்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவியதன் காரணமாக பலர் தேசிய ரீதியில் தங்களது திறமையை வெளிப்படுத்தமுடியாமல் போனதாக தேசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பயிற்சியாளர் குழாமின் முகாமையாளர் சுனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .