2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பொன்னணிகளின் போர் ; மட்டு சிவானந்தா வெற்றி

Super User   / 2014 மே 28 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


திரகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்துக்கும் இடையிலான பொன் அணிகள் போர்(டியவவடந ழக வாந பழடன) மாபெரும் கிறிக்கெட் போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.

இரண்டு அணிகளுக்குமான பொன்னணிகள் போர் செவ்வாயக்கிழமை (27) ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

வெற்றிக் கிண்ணத்தை கடந்த மூன்று வருடங்களாக சுவிகரித்து வந்த சிவானந்தா வித்தியாலயம் இவ் வருடமும் தனதாக்கிக் கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள இராமக்கிருஷ்ண மிஷன் பாடசாலைகளான இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையில் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துவதற்காக பொன்னணிகள் போர் என்ற பெயரில் 1993 ஆம் ஆண்டு இப் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X