2025 நவம்பர் 19, புதன்கிழமை

கரப்பந்தாட்டப் போட்டியில் ஒலி ஒலி கழகம் முதலாமிடம்

Super User   / 2014 மே 28 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ராஜ்குமார்


சம்பூர் இராமகிருஸ்ணா விiளாயட்டுக் கழகத்தின் 32ஆவது ஆண்டு பூர்த்தியின் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் கழகத்தின் தலைவர் கோ.குமாரநாயகம் தலமையில் கட்டைபறிச்சான்  நலன்புரி நிலையத்திலுள்ள  கழக மைதானத்தில் சனிக்கிழமை (24) இடம் பெற்றது. 

இப் போட்டியில் 01ஆம் இடத்தினை   கிறவெற்குழி  ஒலி ஒலி விளையாட்டுக்  கழகம்  தனதாக்கிக் கொண்டது, 02ஆம் இடத்தினை  சம்பூர் ஸ்ரீகணோசா விளையாட்டுக் கழகமும்  03ஆம் இடத்தினை யாழ்ப்பாணம் பிறன்ஸ்  விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது. சம்பூர் சிறுமலர் விளையாட்டுக் கழகம்  04ஆம்  இடத்தினை பெற்றுக் கொண்டது.

இந்நிகழ்வுகளில்  சட்டத்தரணி சி.புலேந்திரன்,  வைத்திய அதிகாரி  அ.சதிஸ்குமார், சமாதான நீதவானும், மூதூர் பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவருமான இ.நாகேஸ்வரன், கட்டைபறிச்சான்  வடக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.குணபூசனம், முன்னாள் சம்பூர் மகாவித்தியாலய  அதிபர் வி.முத்துராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.  





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X