2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

புத்தளத்தில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Suganthini Ratnam   / 2014 மே 30 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் தள வைத்தியசாலையின் விளையாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் 15ஆம் திகதிகளில் புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை ரீதியில் நடைபெறவுள்ள இப்போட்டியில் அரச நிறுவனங்களினதும் தனியார் நிறுவனங்களினதும் விளையாட்டு கழகங்களினதும் அணிகள் கலந்துகொள்ளமுடியும்.

இப்போட்டி 5 ஓவர்களைக்  கொண்டதாக நடத்தப்படுவதுடன், வெற்றி பெறும்  அணிக்கு 30,000 ரூபாவும் வெற்றிக்கிண்ணமும் இரண்டாமிடம் பெறும் அணிக்கு 20,000 ரூபாவும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படுவதுடன், சிறந்த துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு பரிசுகளும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளதாக புத்தளம் தள வைத்தியசாலையின் அத்தியட்சகர் அசோக் பெரேரா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X