2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புத்தளம் லிவர்பூல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}



எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி வரும் 35 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கான கால்ப்பந்தாட்ட தொடரின் ஐந்தாவது போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி வெற்றி பெற்றதன் மூலம் அவ்வணியானது 03 புள்ளிகளை பெற்று மொத்தமாக 07 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கான தகுதியை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த முக்கியத்துவம் மிக்க ஆட்டமானது. புத்தளம் சாகிரா தேசிய பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (30) மாலை இடம்பெற்றது. லிவர்பூல் அணியை யாழ். முஸ்லிம் யுனைட்டெட் அணி எதிர்த்தாடியது. முதல் பாதியில் இரு  அணிகளும்  எவ்வித கோல்களையும் பெறாத போதிலும்  பின்னர் லிவர்பூல் அணியினரின் அபார ஆட்டத்தினால் அவ் அணி 02 கோல்களினால் வெற்றி பெற்றது.

லிவர் பூல் அணிக்காக, அவ்வணியில் இளைஞர் காலம் தொட்டே திறமைகளை வெளிப்படுத்தி வரும் என்.எம்.ரிழ்வான், எம்.ஐ.எம். மூஸீன் ஆகியோர் கோல்களை பெற்றுக்கொடுத்தனர். போட்டிக்கு நடுவர்களாக எம்.ஏ. பஸ்ரின், எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.எஸ்.எம். நௌபி ஆகியோர் கடமையாற்றினர்.

யாழ். முஸ்லிம் யுனைட்டெட் அணியானது இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் அவ்வணியானது புள்ளிகள் எதுவும் பெறாத நிலையில் தொடரிலிருந்து  வெளியேறியது.

இந்த போட்டி தொடரானது புள்ளிகள் அடிப்படையிலான தொடர் என்றாலும் அதி கூடிய புள்ளிகளை பெறும் அணி நேரடியாக சம்பியனாக கருதப்பட மாட்டாது. மாறாக அதி கூடிய புள்ளிகளை பெறும்  இரு அணிகளுக்கும் இறுதிப்போட்டி நடைபெற்று அதில் வெற்றி பெரும் அணி சம்பியனாக கருதப்படும்.

இத்தொடரின் இறுதிப்போட்டியானது வரும் 07 ம் திகதி சனிக்கிழமை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன பொருளாளரும், புத்தளம் கால்பந்தாட்ட லீக் செயலாளருமான ஜே.எம். ஜௌசி  தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .