2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புத்தளம் விம்பிள்டன் அணி இறுதி போட்டிக்கு தகுதி

Super User   / 2014 ஜூன் 01 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி வரும்  35 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட தொடரின் கடைசிப்போட்டியில்,  பலம்வாய்ந்த புத்தளம் விம்பிள்டன் அணி 01 புள்ளியை பெற்று மொத்தமாக 05 புள்ளிகளோடு இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்த முக்கியமானதும், தமது அணியின் தலை விதியை தீர்மானிப்பதுமான போட்டியானது புத்தளம் சாகிரா தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (31) இடம்பெற்றது. விம்பிள்டன் அணியோடு புத்தளம் ட்ரிபல் செவன் அணி எதிர்த்தாடியது. இந்த இரு அணிகளுக்குமே இந்த போட்டியானது முக்கியமான போட்டியாக கருதப்பட்டது.

இந்த தொடரில் ஏற்கனவே 04 புள்ளிகளை பெற்ற விம்பிள்டன் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது போட்டி சமநிலை அடைந்தாலோ இறுதிப்போட்டிக்கான தகுதியை பெற்று விடும். மாறாக  ட்ரிபல் செவன் அணியோ ஏற்கனவே 03 புள்ளிகளை பெற்றிருந்ததுடன் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே இறுதிப்போட்டிக்கான தகுதியை பெறும்  நிலையில் களம் இறங்கியது.

போட்டி ஆரம்பிக்கப்பட்டு இறுதி வரைக்கும் இரு அணிகளும் கோல் போட எத்தனித்தும் அது கைகூடாமல் போனது. இந்த ஆட்டத்தின் போது  விம்பிள்டன் அணியின் கோல் காப்பாளர் எம்.நௌசின் மற்றும்  ட்ரிபல் செவன் அணியின் கோல் காப்பாளர் எம்.அஸ்லம் ஆகியோர் திறம்பட செயல்பட்டதால் இரு அணிகளும் கோல்  போட எத்தணித்த அத்தனை சந்தர்ப்பங்களும் கை நழுவி போயின.

போட்டிக்கு நடுவர்களாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரியும், புத்தளம் லீக்கின் மத்தியஸ்தர் குழு தலைவருமான பீ.எம்.ஹிஸாம், எச். ஹம்ருசைன், ஏ.ஏ.எம். கியாஸ் ஆகியோர் கடமையாற்றினர்.

இத்தொடரின் இறுதிப்போட்டிக்காக தெரிவாகியுள்ள புத்தளம் விம்பிள்டன் மற்றும் லிவர்பூல் அணிகள் இரண்டுமே மிகவும் பலம் வாய்ந்த அணிகள். இறுதி போட்டி எதிர்வரும் 07 ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.        




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .