2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

டஸ்கஸ் அணி கிண்ணத்தை சுவிகரித்தது

Super User   / 2014 ஜூன் 01 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் டஸ்கஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

முன்னாள் மாநகர முதல்வரும், மெற்றோபொலிற்றன் கல்வி ஸ்தாபனத்தின் தலைவருமான சிறாஸ் மீராசாஹிப் தலைமையில் சனிக்கிழமை (31) சாய்ந்த மருது கடற்கரை மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து சிறப்பித்தார்.

அணிக்கு 06 பேர் 05 ஓவர்கள் கொண் இச்சுற்றுப் போட்டியில் 36 முன்னணிக் கழகங்கள் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியிக்கு தகுதி பெற்ற சாய்ந்தமருது டஸ்கஸ் அணியுடன் சாய்ந்தமருது பிளையிங் கோர்ஸ் இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது. விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டஸ்கஸ் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 57 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிளையிங் கொர்ஸ் விளையாட்டுக் கழகம் நான்கு விக்கெட்டுக்களை இழந்து ஐந்து ஓவர்கள் முடிவில் 47 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .