2025 நவம்பர் 19, புதன்கிழமை

கபடி மற்றும் மல்யுத்த வீரர்கள் மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு

Super User   / 2014 ஜூன் 01 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்,


கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சு மற்றும் மாகாண விளையாட்டுத் திணைக்களம் இணைந்து, கபடி மற்றும் மல்யுத்த வீரர்களை மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்வதற்கான மாவட்ட மட்டப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகள் சனிக்கிழமை (31) மட்டக்களப்பில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் மற்றும் யுவதிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் கபடிப் போட்டிகளும் நகர இந்து இளைஞர் மன்றக் கட்டிடத்தில் மல்யுத்தப் போட்டிகளும் இடம்பெற்றன.

கபடி, மல்யுத்தம், கால்பந்து மற்றும் கராத்தே போட்டிகளில் சுமார் 200 இளைஞர், யுவதிகள் பங்கேற்றுள்ளதாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் எம். மதிவதனன், பிரதேச செயலாளர் கே.தவராஜா, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கே.ஈஸ்வரன் ஆகியோர் போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

கால்பந்தாட்டப் போட்டிகள் கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திலும், குருக்கள்மடம் சரஸ்வதி வித்தியாலய உள்ளக மண்டபத்தில் கராத்தே போட்டியும் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X