2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கபடியில் வடமராட்சி கல்வி வலய அணிகள் ஆதிக்கம்

Super User   / 2014 ஜூன் 01 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


                        
  கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி

-குணசேகரன் சுரேன்                                                                                             

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கபடிப் போட்டிகளில் வடமராட்சிக் கல்வி வலயப் பாடசாலை அணிகளின் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.

முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

இரண்டாம் கட்டப் போட்டிகளில் ஒன்றான கபடிப் போட்டி முல்லைத்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்றது.

இதில் 15 வயதுப்பிரிவு ஆண்களில் யாழ்.கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி (வடமராட்சி) முதலிடத்தினையும், யாழ்.சில்லாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை இரண்டாமிடத்தினையும், கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.

15 வயதுப்பிரிவு பெண்களில் வவுனியா பரகும் மகா வித்தியாலயம் முதலிடத்தினையும், யாழ்.பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை இரண்டாமிடத்தினையும், யாழ்.பருத்தித்துறைப் பெண்கள் உயர்தரப் பாடசாலை (வடமராட்சி) மூன்றாமிடத்தினையும் பெற்றன.

19 வயதுப்பிரிவு பெண்களில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி (வடமராட்சி) முதலிடத்தினையும், யாழ்.பருத்தித்துறைப் பெண்கள் உயர்தரப் பாடசாலை (வடமராட்சி) இரண்டாமிடத்தினையும், கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான இறுதிப்போட்டி இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற குழப்பம் காரணமாகவும், தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் இடம்பெறமால் பிறிதொரு நாளிற்கு ஒத்திவைக்கப்பட்டது. 

முன்னதாக நடைபெற்ற மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி (வடமராட்சி) அணி பெற்றுக்கொண்டது.

சில்லாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி


நெல்லியடி மத்திய கல்லூரி அணி



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .