2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கால்பந்து கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டியில் ஏசிமிலாள் அணி சம்பியன்

Super User   / 2014 ஜூன் 02 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


திருக்கோவில் உதயசூயன் விளையாட்டுக்கழகம் நடாத்திய 2014ம் ஆண்டுக்கான வெக்நெட் ஆச்சரியம் சவால் கால்பந்து கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டியில் திருக்கோவில் ஏசிமிலாள் அணி சம்பியன் கிண்ணத்தை தட்டிச்சென்றது.

இந்த கால்பந்து சுற்றுப்போட்டியானது திருக்கோவில் ஆலையடிவேம்பு கால்பந்து விளையாட்டு கழகங்களில் வீரர்களை ஒன்றினைத்து ஒற்றுமையுடன் திறமைகளின் தேடல் என்ற கருப்பொருளுடன் நான்கு விளையாட்டு கழகங்களாக பிரித்து கடந்த வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான சுற்றுத் தொடரின் இறுதிச் சுற்றுபோட்டி ஞாயிற்றுக்கிழமை (01) திருக்கோவில் உதயசூரியன் அரியநாயகம் விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் வை.ஜெயச்சந்திரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் இறுதி சுற்றுப் போட்டியானது இன்றமிலாள் கால்பந்து அணியும் ஏசிமிலாள் அணியும் மோதின. இரு அணிகளும் 2:2 என்ற கோல்கள் அடிப்படையில் சமநிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் பெனாட்டி முறைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட இன்றமிலாள் அணியை வெற்றி கொண்டு ஏசிமிலாள் அணி 2014 ம் ஆண்டுக்கான ஆச்சரியம் சவால் கால்பந்து கிண்ணத்தை  கைப்பற்றி சம்பியனானது. வெற்றி பெற்ற கழகத்திற்கும் ஏனைய கழகங்களுக்கும், வீரர்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களை பிரதம அதிதிகள் வழங்கி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .