2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி இந்து பழைய மாணவர் அணி வெற்றி

Super User   / 2014 ஜூன் 02 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர்களிற்கும் கிளிநொச்சி இந்து கல்லூரி அணிக்கும் இடையில் நடைபெற்ற டுவெண்டி 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி இந்து கல்லூரி அணி 2 இலக்குகளால் வெற்றிபெற்றது.

மேற்படி போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற கிளிநொச்சி இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கிணங்க களமிறங்கிய கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் அணி 19 பந்துபரிமாற்றங்களில் 148 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.தனுஷ் 45 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் கிளிநொச்சி இந்து கல்லூரி பழைய மாணவர் அணி சார்பாக வை.றமேஷன் 4, மை.சஞ்சய், யோ.யூட் வின்ஷன் தலா 3 இலக்குகளை வீழ்த்தினார்கள்.

149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கிளிநொச்சி இந்து கல்லூரி பழைய மாணவர் அணி, 19.2 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் யோ.நிரோசன் 45, மை.சஞ்சய், க.கீர்த்தனன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி சார்பாக ரி.தினேஸ் 2 இலக்குகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிளிநொச்சி இந்து கல்லூரி பழைய மாணவர் அணியின் மை.சஞ்சய் தெரிவு செய்யப்பட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .