2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இளைஞர் தின எல்லே போட்டி காந்தி கழகம் சம்பியன்

Super User   / 2014 ஜூன் 02 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் உதயசூரியன் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய மாவட்ட மட்டத்திலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் ஆறுமுகத்தான்குடியிருப்பு காந்தி விளையாட்டுக் கழகம் முதவாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

தேசிய இளைஞர் தினம் மே 23 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில் பல்வேறு  வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இளைஞர் தின வார நிகழ்வாக மண்முனை மேற்குப் பிரதேசத்திலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே மாவட்ட மட்டத்திலான ஆண்களுக்கான எல்லேப் போட்டி சனிக்கிழமை (31) ஈச்சந்தீவில் நடாத்தப்பட்டது.

தலைவர் த.தினேஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து  இளைஞர் கழக மற்றும் விளையாட்டுக் கழகளின் 28 அணிகள் கலந்துகொண்டன.

இப் போட்டியில் ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த காந்தி விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினையும் மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த அருள் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .