2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண கராத்தே போட்டி மட்டக்களப்பு முதலிடம்.

Super User   / 2014 ஜூன் 02 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார், ரீ.எல்.ஜவ்பர்கான


கிழக்கு மாகாண கராத்தேச் சுற்றுப்போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் முதலாம் இடத்தினைப்பெற்று தேசிய போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பினைப்பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்த மாகாண விளையாட்டு விழாவில் கராத்தே சுற்றுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (01) களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள்மடம் மகா வித்தியாலய உள்ளக அரங்கில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம்.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் பிரதேச மற்றும் மாவட்ட போட்டிகளில் வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட கராத்தே வீரர்கள் இந்த மாகாண விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டனர்.

இதன்போது இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்டமும் இரண்டாம் இடத்தினை அம்பாறை மாவட்டமும் மூன்றாம் இடத்தினை திருகோணமலை மாவட்டமும் பெற்றுக்கொண்டது.

இந்த மாகாண போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம்.மதிவண்ணன் தெரிவித்தார்.

இந்த சுற்றுப்போட்டியில் ஆண், பெண் பிரிவினைச்சேர்ந்த சுமார் நூறுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .