2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காரைதீவு விவேகானந்தா கழகம் இலகு வெற்றி

Super User   / 2014 ஜூன் 02 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


நிந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழம் நடத்திவரும் இம்றான் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் வருடந்தோறும் நடாத்திவரும் ஐ.பி.எல். கடின  பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இம்முறையும் நிந்தவூர் அஸ்ரஃப் ஞாபகர்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்ததுடன் இதன் இறுதிப் போட்டி சனிக்கிழமை (31) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்திலிருந்து 36 கழகங்கள் பங்குபற்றும் இதன் இறுதிப் போட்டிக்கு நிந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழகம் மற்றும் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தெரிவாகின.

முதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் விளையாட்டுக் கழகம் 18.3 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் 18.02 பந்துப்பரிமாற்றங்களில் 06 இலக்குகளை இழந்து குறித்த இலக்கை மிக இலகுவாகப் பெற்று சம்பியனானது.

இம்றான் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசில்களையும், கிண்ணத்தையும் வழங்கி வைத்தார். நிகழ்வில் கிழக்குமாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .