2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தீவக அணிகள், வீரர்கள் கராத்தேயில் ஜொலிப்பு

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கராத்தேப் போட்டிகளில் தீவகக் கல்வி வலய பாடசாலை அணிகள் மற்றும் வீரர்கள் 4 முதலிடங்களையும், ஒரு இரண்டாமிடம் மற்றும் இரண்டு மூன்று இடங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலை அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முடிவுற்ற நிலையில் மூன்றாம் கட்டப் போட்டிகள் தற்போது வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

கராத்தே போட்டிகள் வவுனியா சிவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் வவுனியா கத்தோலிக்கத் திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் இடம்பெற்றன.

கராத்தேப் போட்டிகள், கராத்தே காட்டா (கராத்தேயின் அசைவுகளைச் செய்து காட்டுதல்) தனிநபர் மற்றும் அணி என நடைபெற்றன.

அத்துடன் குமுத்தி (சண்டையில் ஈடுபடுதல் - தனிநபர் போட்டி) போட்டியும் இடம்பெற்றன.

குமுத்தி (சண்டையில் ஈடுபடுதல்) வெற்றியாளர்கள்

குமுத்தி கராத்தேயில் 15 வயது ஆண்களில் முதலிடத்தினை ரி.தனுஜன் (யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி), இரண்டாமிடத்தினை எஸ்.சஞ்சீவன் (கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி), மூன்றாமிடத்தினை எஸ்.ரிலுக்ஷன் (யாழ்.இணுவில் இந்து கல்லூரி) ஆகியோர் பெற்றனர்.

குமுத்தி 15 வயதுப்பிரிவு பெண்களில் முதலிடத்தினை எம்.தியாகராசி (யாழ்.புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாலயம் - தீவகம்), இரண்டாமிடத்தினை பி.தேனுகா (யாழ்.தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயம்), மூன்றாமிடத்தினை கே.தமிழ்நிலா (கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோர் பெற்றனர்.

குமுத்தி 17 வயதுப்பிரிவு ஆண்களில் முதலிடத்தினை எம்.முரளி (யாழ்.சென்.அன்ரனீஸ் கல்லூரி), இரண்டாமிடத்தினை ஈ.அல்லிக்குமரன் (யாழ்.வேலாயுதம் மகா வித்தியாலயம்), மூன்றாமிடத்தினை ரி.தனுசன் (கிளிநொச்சி மத்திய கல்லூரி) ஆகியோர் பெற்றனர்.

குமுத்தி 17 வயதுப்பிரிவு பெண்களில் முதலிடத்தினை எஸ்.சிந்துஜா (யாழ்.பருத்தித்துறை பெண்கள் உயர்தரப் பாடசாலை), இரண்டாமிடத்தினை பி.துவாரகா (யாழ்.தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்), மூன்றாமிடத்தினை எஸ்.பிரத்திகா (கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

குமுத்தி 19 வயதுப்பிரிவு ஆண்களில் முதலிடத்தினை எச்.என்.றினாஷ; (வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயம்) இரண்டாமிடத்தினை ஆர்.செந்தூரன் (யாழ்.இந்து கல்லூரி), மூன்றாமிடத்தினை எம்.முரளிதரன் (யாழ்.கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

குமுத்தி 19 வயதுப்பிரிவு பெண்களில் முதலிடத்தினை ஆர்.தமிழ்மகள் (கிளிநொச்சி இந்து கல்லூரி), இரண்டாமிடத்தினை எச்.நர்மதா (யாழ்.இந்து மகளிர் கல்லூரி), மூன்றாமிடத்தினை என்.சர்மிளா (கிளிநொச்சி இந்து கல்லூரி) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

காட்டா (கராத்தே அசைவுகளைச் செய்து காட்டுதல்) அணிகளுக்கிடையிலான போட்டி

15 வயதுப்பிரிவு ஆண்களில் முதலிடத்தினை கிளிநொச்சி மத்திய கல்லூரியும், இரண்டாமிடத்தினை யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியும், மூன்றாமிடத்தினை கிளிநொச்சி நெச்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் பெற்றுக்கொண்டன.

15 வயதுப்பிரிவு பெண்களில் முதலிடத்தினை யாழ்.கைதடி நவீல்ட் பாடசாலையும், இரண்டாமிடத்தினை கிளிநொச்சி இந்து கல்லூரியும்,மூன்றாமிடத்தினை கிளிநொச்சி மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.

17 வயதுப்பிரிவு ஆண்களில் முதலிடத்தினை யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியும், இரண்டாமிடத்தினை சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும், மூன்றாமிடத்தினை கிளிநொச்சி நெச்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் பெற்றுக்கொண்டன.

17 வயதுப்பிரிவு பெண்களில் முதலிடத்தினை யாழ்.கைதடி நபீல்ட் பாடசாலையும், இரண்டாமிடத்தினை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியும், மூன்றாமிடத்தினை கிளிநொச்சி இந்து கல்லூரியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு ஆண்களில் முதலிடத்தினை சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும், இரண்டாமிடத்தினை அச்சுவேலி மத்திய கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவில் முதலிடத்தினை கிளிநொச்சி இந்து கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

காட்டா (கராத்தே அசைவுகளைச் செய்து காட்டுதல்) தனிநபர்களுக்கிடையிலான போட்டி

15 வயதுப்பிரிவு ஆண்களில் முதலிடத்தினை எல்.பிரியதர்ஷன் (யாழ்.கைதடிய நபீல்ட் பாடசாலை), இரண்டாமிடத்தினை எம்.சதன் (யாழ்.புங்குடுதீவு மகா வித்தியாலயம் - தீவகம்), மூன்றாமிடத்தினை எஸ்.சிந்துஜன் (சென்.பற்றிக்ஸ் கல்லூரி) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

15 வயதுப்பிரிவு பெண்களில் முதலிடத்தினை பி.தேனுகா (யாழ்.தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்), இரண்டாமிடத்தினை எஸ்.ஜானுகா (யாழ்.கைதடி நபீல்ட் பாடசாலை), மூன்றாமிடத்தினை கே.தமிழ்நிலா (கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

17 வயதுப்பிரிவு ஆண்களில் முதலிடத்தினை ஈ.ஆழிக்குமரன் (யாழ்.வேலாயுதம் மகா வித்தியாலயம்), இரண்டாமிடத்தினை ஏ.துஸியந்தன் (யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி), மூன்றாமிடத்தினை எம்.முரளி (சென்.ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

17 வயதுப்பிரிவு பெண்களில் முதலிடத்தினை எஸ்.சிந்துஜா (யாழ்.பருத்தித்துறை பெண்கள் உயர்தரப் பாடசாலை), இரண்டாமிடத்தினை பி.துவாரகா (யாழ்.தும்பளை சிவப்பிரகாச மாக வித்தியாலயம்), மூன்றாமிடத்தினை சி.ஜெயந்தினி (யாழ்.கைதடி நபீல்ட் பாடசாலை) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

19 வயதுப்பிரிவு ஆண்களில் முதலிடத்தினை எம்.சுகிர்தன் (சென்.அன்ரனீஸ் கல்லூரி – தீவகம்), இரண்டாமிடத்தினை எச்.எம்.றினாஸ் (வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயம்), மூன்றாமிடத்தினை எம்.மபீஸன் (வவுனியா கத்தோலிக்க திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

19 வயதுப்பிரிவு பெண்களில் முதலிடத்தினை ஆர்.நிதுஜா (யாழ்.வேலணை மத்திய கல்லூரி – தீவகம்), இரண்டாமிடம் என்.சர்மிளா (கிளிநொச்சி இந்து கல்லூரி), எச்.நர்மதா (யாழ்.இந்து மகளிர் கல்லூரி) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .