2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சென்.அன்ரனீஸ், செந்தமிழ் அணிகள் வெற்றி

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்
 
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுசரணையில் யாழ். மாவட்டக் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தி வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மணற்காடு சென்.அன்ரனீஸ் மற்றும் செந்தமிழ் அணிகள் வெற்றி
 
யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 51 கால்பந்தாட்;ட அணிகள் பங்குபற்றுகின்ற மேற்படி சுற்றுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (01) உதயதாரகை மைதானத்தில் ஆரம்பமாகியது.
 
திங்கட்கிழமை (02) இடம்பெற்ற முதற் போட்டியில் மணற்காடு சென்.அன்ரனீஸ் அணியினை எதிர்த்து அல்வாய் நக்கீரன் அணி மோதியது. இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் தலா 2 கோல்களைப் பெற்றிருந்தது.
 
இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. இதில் செந்தமிழ் அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
 
இரண்டாவது போட்டியில் செந்தமிழ் அணியினை எதிர்த்து விண்மீன் பி அணி மோதியது. இதில் செந்தமிழ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .