2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் ; டேபிள் டென்னிஸ்சில் வெற்றி

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழககு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட  டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் நான்கு இடங்களிலும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் ஞயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற இப்போட்டியில் 19 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவு மற்றும் 15 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவுகள் ஆகிய நான்கு பிரிவுகளிலும் ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் சம்பியன் பட்டத்தை வென்று கிழக்கு மாகாணத்தில் சரித்திரத்தைப் பதித்துக் கொண்டது.

இந்த வெற்றியை பாராட்டும் முகமாக திங்கட்கிழமை (02) ஐயங்கேணிக் கிராம மக்கள் வெற்றிபெற்ற அணியினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் சம்பியன்ஸிப் போட்டிகள் ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்திற்கும் திருகோணமலை புனித சென் மேரிஸ் கல்லூரி, மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு வின்சன்ற் தேசியக் கல்லூரி, அக்கரைப்பற்று மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கிடையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மிகப் பின்தங்கிய பாடசாலையான ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தில் இதுவரை சொந்தமாக டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான ஒரு மேசை கூட இல்லாத நிலையில் இந்தப் பாடசாலை கிழக்கு மாகாணத்தில் நான்கு சம்பியன் பட்டங்களையும்  தனதாக்கிக் கொண்டிருப்பது பெருமைப்பட வேண்டிய விடயம் என்று அந்தப்பாடசாலையின் டேபிள் டென்னிஸ் பயிற்றுப்பாளரான உடற்கல்வி ஆசிரியர் எஸ்.ஸ்ரீ முருகன் தெரிவித்தார்.

இந்தப் பாடசாலை 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண மட்டத்தில் 2 சம்பியன்களையும், 2013 ஆம் ஆண்டு 3 சம்பியன்களுக்கான விருதுகளையும், 2014 ஆம் ஆண்டு 4 சம்பியன்களையும் தனதாக்கி சரித்திரம் படைத்துள்ளது.

சென்ற ஆண்டு தேசிய மட்டத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கிடையில் இடம்பெற்ற பட்மின்ரன் பூப்பந்தாட்டப் (டீயனஅiவெழn) போட்டிகளில் ஐயங்கேணி தமிழ் வித்தியாலய மாணவி கே.நிஸாந்தினி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X