2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கடுக்காமுனை ஆதவன் கழகம் தேசிய மட்டத்திற்கு தெரிவு

Super User   / 2014 ஜூன் 03 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கிழக்கு மாகாண பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களில் பெண்கள் பிரிவுகளுக்கிடையிலான கால்பத்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு கடுக்காமுனை ஆதவன் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளது.
 
கிழக்கு மாகாண விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (01) வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
 
இதில் கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த தலா ஒவ்வொரு அணிகள் இறுதிப் போட்டியில் பங்கு பற்றியிருந்தன. முதலில் அம்பாறை மாவட்ட அணிக்கும் திருகோணமலை மாட்ட அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் அம்பாரை மாவட்ட அணி 6 கோள்களைப் போட்ட அதேவேளை திருகோணமலை மாவட்ட அணி எதுவித கோள்களையும் போடவில்லை.
 
இந்நிலையில் 6 இற்கு பூச்சியம் என்ற வித்தியாசத்தில் அம்பாறை மாவட்ட அணி வெற்றி பெற்றது.
 
பின்னர் இறுதியில் வெற்றி பெற்ற அம்பாறை மாவட்ட அணியும் மட்டக்களப்பு மாவட்ட அணியும் விளையாடி மட்டக்களப்பு மாவட்ட அணி 6 கோள்களைப் போட்ட அதே வேளை அம்பாறை மாவட்ட அணி எதுவித கோள்களையும் போடவில்லை
 
இந்நிலையில் 6 இற்கு பூச்சியம் என்ற வித்தியாசத்தில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டம்  படுவான்கரையில் அமைந்துள்ள கடுக்காமுனை ஆதவன் விளையாட்டுக்கழக பெண்கள் பரிவு  இதில் கலந்து கொண்டிருந்து.
 
கடுக்காமுனை ஆதவன் விளையாட்டுக்கழக பெண்கள் அணியினர் கடந்த 2012, 2013, 2014, ஆகிய மூன்று வருடங்களும் தொடர்ச்சியாக கிழக்கு மாகாண பெண்கள் பிரிவு கால்பந்தாட்டப் போட்டியில் முதலிடத்திலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
 
கடுக்காமுனை கிராமத்தினைச் சேர்ந்த கணேசமூர்த்தி வீரலெட்சுமி என்பவரின் தலைமைத்துவத்தின் கீழ் அப்பிளாந்துறைக் கிராமத்தினைச் சேர்ந்த மாமாங்கம்  ஜீவரெட்டம் ஆசிரியரின் பயிற்றுவித்தலுடன் இவ்விளையாட்டுக் கழகம் செய்ற்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்தாகும்.  
 
தேசியமட்ட பெண்கள் பிரிவு கால்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் யூலை மாதம் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .