2025 நவம்பர் 19, புதன்கிழமை

கபடியில் வெற்றியீட்டியவர்களை கௌரவிப்பு நிகழ்வு

Super User   / 2014 ஜூன் 04 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வடமாகாணப் பாடசாலைகளின் 15 வயதுப்பிரிவு பெண்களுக்கான கபடிப் போட்டியில் இரண்டாமிடத்தினைப் பெற்ற பண்டத்தரிப்பு ஜெசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் கபடி அணி வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (04) பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் அருட் சகோதரி மேரிலாசரஸ் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கௌரவிப்பு நிகழ்வில், கபடி அணியின் வீராங்கனைகள் மற்றும் அதன் பயிற்றுவிப்பாளர்களான கே.ஜெயராஜ் செல்வி.நிசாந்தினி ஆகியோர் பாண்ட் வாத்தியத்துடன் பாடசாலை மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு, கௌரவிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.சிவானந்தராசா, வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி குணபாலசிங்கம் கோசலை, பண்டத்தரிப்பு பங்கு அருட்தந்தை எஸ்.நேசரத்தினம் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X