2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி வெற்றி

Super User   / 2014 ஜூன் 04 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா 

இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தினால் யாழ் மாவட்டப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஆதரவுடன் யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 15 வயதுப்பிரிவு அணியினருக்கிடையில் நடத்தப்பட்டு வரும் துடுப்பாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

50 பந்துபரிமாற்றங்களைக் கொண்ட இந்தப் போட்டியின் ஆட்டம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றதுடன், இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி 46.2 பந்துபரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.சர்மிலன் 38, ஜே.டிலோஜன் 26, ரி.தேனுஜன் 20, எம்.கமல்ராஜ் 17, ஜே.அனோஜன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், உதிரிகளாக 53 ஓட்டங்கள் பெறப்பட்டன.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி சார்பாக எஸ்.கலைச்செல்வன் 03, வை.விதுசன் 02, எம்.ஜனுசன் 02 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 45.1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில், எம்.கோபிராம் 40, ஆர்.அரவிந்தன் 26, வை.விதுசன் 22, கே.கிரித்தகணேஸ் 15, ஜே.சலுஜன் 12, ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், உதிரிகளாக 31 ஓட்டங்கள் பெறப்பட்டன.

மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த எம்.பகீரதன் 10 பந்துபரிமாற்றங்கள் பந்து வீசி 04 ஓட்டமற்ற பந்துப்பரிமாற்றங்கள் அடங்கலாக 16 ஓட்டங்களுக்கு 06 இலக்குகளையும், ஜே.அனோஜன்  02, எஸ்.சர்மிலன் 02 இலக்குகளையும் கைப்பற்றினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .