2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை மாவட்டத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Super User   / 2014 ஜூன் 08 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் மாவட்டம் தோறும் 15 வயது 17 வயதக்கு உட்பட்டவர்களுக்கான சுற்றுப்போட்டிகளை நடத்தி வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்துக்கான சுற்றுப்போட்டியில் 15 வயது பிரிவில் பதவிய ரக 78 வித்தியாலயத்திற்கும், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினருக்கும் இடையிலான போட்டி வெள்ளிக்கிழமை (06) ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பதவிய ரக 78 வித்தியாலய அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்களில் 26 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகம் கொடுத்து சகல இலக்குகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு களமிறங்கிய ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர்  32 பந்துப்பரிமாற்றங்களில்  7 இலக்குகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள்  வெற்றி பெற்றனர். 8ஆவது ஆட்டக்காரராக களம் புகுந்த வசந்தகுமார் ஆகாஷ் ஆட்டமிஇழக்காமல்  36 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தார்.

கந்தளாய் மத்திய கல்லூரியுடனான போட்டி வியாழக்கிழமை (05) இடம்பெற்றது. முதலில் களம் புகுந்த கந்தளாய் மத்திய கல்லூரி அணியினர் 27 பந்துப்பரிமாற்றங்களில் 181 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு களம் புகுந்த ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 32 பந்துப்பரிமாற்றங்களில்  சகல இலக்குகளையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றனர். மிகத்திறமையாக துடுப்பெடுத்தாடிய வசந்தகுமார் ஆகாஸ் 59 ஓட்டங்களைப் பெற்றார்.
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினருக்கும் சேரவில மகாவலிகம் நவோதய பாடசாலைக்கும் இடையிலான  மற்றொரு போட்டி  மகாவெலிகம மைதானத்தில் திங்கட்கிழமை (09) நடைபெறவுள்ளது.
இப்போட்டித் தொடரில் சிங்கள மகா வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி என்பன கலந்து கொள்வதற்கு விண்ணப்பித்த போதும் இவ்விரு பாடசாலை அணிகளும் பின்னர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .