2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆதிவாசிகள் அணி இரண்டாவது போட்டியில் வெற்றி

Super User   / 2014 ஜூன் 08 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் இந்து மத்திய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (07)  மாலை  நடைபெற்ற இரு கிரிக்கட் போட்டிகளில் மகியங்கனை ஆதிவாசிகள் அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்து மற்றைய போட்டியில் வெற்றியடைந்துள்ளது.

புத்தளம் நகர  முதல்வர் கே.ஏ.பாயிஸின் அழைப்பின் பேரில் புத்தளத்திற்கு விஜயம் செய்திருந்த மகியங்கனை ஆதிவாசிகள் சமூகத்தினருக்காக இந்த கிரிக்கட்  போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

புத்தளம் நகர சபையும், புத்தளம் சமூக மறு சீரமைப்பாளர் ஒன்றியமும் இணைந்து இப்போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தன.

10 ஓவர்களை கொண்ட இப்போட்டிகளின் முதலாவது ஆட்டத்தில் ஆதிவாசிகள் அணியோடு புத்தளம் நகரில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களின் அணி எதிர்த்தாடியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புத்தளம் அணி 10 பந்துபரிமாற்றங்கள் முடிவில் 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆதிவாசிகள் அணி 10 பந்துபரிமாற்றங்கள் முடிவில் சகல இலக்குகளையும் இழந்து 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதால் 120 மேலதிக ஓட்டங்களால் புத்தளம் அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் புத்தளம் நகர  முதல்வர் கே.ஏ.பாயிஸின் தலைமையிலான நகர சபை, பிரதேச சபை, மாகாண சபைகளின் உறுப்பினர்களை கொண்ட பிரமுகர்கள் அணியோடு ஆதிவாசிகள் அணி எதிர்த்தாடியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரமுகர்கள் அணி  ஆதிவாசிகள் அணியினரின் அபார  பந்து வீச்சினால் நிலை குலைந்து 10 பந்துபரிமாற்றங்கள் முடிவில் 06 இலக்குகளை இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆதிவாசிகள் அணி 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் அவ்வணி 04 இலக்குகளால் வெற்றி பெற்று  சம்பியனானது.

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக்கிண்ணங்களையும், பரிசுத் தொகையினையும் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .