2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சம்பூர்-(ஏ) கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரிப்பு

Super User   / 2014 ஜூன் 08 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்பூர்-(ஏ) விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது.

துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்  கழகத்தின் ஆண்டு நிறைவினை முன்னிட்டு சனிக்கிழமை (07) நடாத்தப்பட்ட இந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 32 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.

இதன் இறுதிப்போட்டி  சம்பூர்- (ஏ) அணிக்கும் சம்பூர்- (வி) அணிக்கும் இடையில் நடைபெற்றதில் சம்பூர்- (ஏ) அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாமிடத்தினை சம்பூர்-(வி) அணியும், மூன்றாமிடத்தினை நாவக்காடு விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கல்லாறு துறைநீலாவணை பலநோக்கு கூடடுறவுச் சங்கத்தின் முன்னாள் முகாமையாளர் சரவணமுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர் பி.இளங்கோ, முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் கே.யோகராசா, கிராம சேவை உத்தியோகத்தர்களான வி.கனகசபை, ரி.கோகுலராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .