2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மட்டிக்கழி கதிரொளி கழகம் சம்பியன்

Super User   / 2014 ஜூன் 09 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடனும் மட்டக்களப்பு கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் அனுசரணையுடனும் சுனாமியால் உயிர் நீத்த உறவுகளின் 10ஆம் ஆண்டு ஞாபகாத்தமாக கல்லடி கடல் மீன்கள் விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (08) கல்லடி விபுலானந்தா வித்தியாலய மைதானத்தில் கழகத்தின் உபதலைவர் பிரேந்திரராஜா தலைமையில் இடம்பெற்றது.

இச்சுற்றுப் போட்டி கடந்த சனிக்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது. அணிக்கு 07 பேர் கொண்ட போட்டியாக இடம்பெற்றது. இப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 33 கால்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டதுடன் இதன் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுக் கழகமும், சீலாமுனை ஜங்ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதின. இறதிப்போட்டியில் இரு அணிகளும் எதுவித புள்ளிகளும் பெறதமையால் தண்டணை உதை மூலம் கதிரொளி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் 1ம், 2ம், 3ம், 4ம், இடங்களை முறையே கதிரெளி விiயாட்டுக் கழகம், ஜங்ஸ்டார் விளையாட்டுக் கழகம், மைக்கல் மேன் விளையாட்டுக் கழகம், ரெட்ணம் விளையாட்டுக் கழகம் ஆகியன பெற்றுக் கொண்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கலந்து கொண்டார் அத்துடன் கல்லடி திருச்செந்தூர் பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி உட்பட கல்லடி ஆலயங்களின் நிர்வாகிகள் பூசகர்கள் என பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன் போது வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .