2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இளவாலை யங்ஹென்றிஸ் அணி வெற்றி

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


சர்வதேச கால்ப்பந்தாட்ட போட்டிகளை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கினால் நடத்தப்பட்ட 40 வயதுக்க மேற்பட்டவர்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்டப் போட்டியில் இளவாலை யங்ஹென்றீஸ் அணி வெற்றிபெற்றது.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற இந்தப் போட்டியில் மானிப்பாய் றெட்றேஞ்சர்ஸ் அணியினை எதிர்த்து இளவாலை யங்கென்றிஸ் அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை. இரண்டாவது பாதியாட்டத்தில் றெட்றேஞ்சர்ஸ் அணி வீரன் அ.வாசிங்டன் முதல் கோலினைப் பெற்றார்.

இருந்தும், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் யங்கென்றிஸ் அணி வீரன் அ.விக்னேஸ்வரன் ஒரு கோல் போட்டார். அதே உத்வேகத்துடன், விக்னேஸ்வரன் மேலும் ஒரு கோல் போட ஆட்டம் யங்கென்றிஸ் பக்கம் சாய்ந்தது.

இறுதியில் யங்கென்றிஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .