2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஹார்ட் அன்ட் சொப் கழகம் சம்பியன்

Super User   / 2014 ஜூன் 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அக்கரைப்பற்று ஹார்ட் அன்ட் சொப்ட் விளையாட்டுக்கழகத்தின் 03ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஹார்ட் அன்ட் சொப் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

கடந்த இருவாரங்களாக 46 முன்னணிக் கழகங்களுக்கிடையில் நடைபெற்று வந்த இந்த சுற்றுப் பொட்டியின் இறுதிப் போட்டி அக்கரைப்பற்று மத்திய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்றது.

ஹார்ட் அன்ட் சொப்ட் அணியின் பணிப்பாளாரும், உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் பொதுசன தொடர்பு அதிகாரியும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸின் அனுசரணையுடன் இச்சுற்றுப் போட்டி இடம்பெற்றது.

அணிக்கு 07 பேர் 05 பந்துப்பரிமாற்றங்களைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று ஹார்ட் அன்ட் சொப்ட் அணியும், பள்ளிக்குடியிருப்பு றஹீமியா விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றிருந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற றஹீமியா அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 05 பந்துப்பரிமாற்;றங்கள் முடிவில் 05 இலக்குகளை இழந்து 51 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹார்ட் அன்ட் சொப்ட் அணியினர் 03 இலக்குகளை இழந்து 3.5 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகம்கொடுத்து 53 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றனர்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரர், சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் ஆகிய இரு  விருதினையும் பந்து விச்சு மற்றும் துடுப்பாட்டங்களில் சிறப்பாக திறமைகளை வெளிக்காட்டிய எம்.ஐ.சகாப்தீன் தட்டிக் கொண்டார்.

இறுதிப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரியும், சமூக சேவையாளருமான எஸ்.எம்.சபீஸ், சமூக சேவையாளர் மீரா சஹீட் உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்து பரிசில்களையும், வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .