2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நற்பிட்டிமுனை பிறைவர் கழகம் வெற்றி

Super User   / 2014 ஜூன் 15 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


நாவிதன்வெளிப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 6ஆம் கிராமம் அறபா விளையாட்டுக் கழகத்தின் 7ஆவது ஆண்டுப் பூர்த்தியினை முன்ணிட்டு மை ஹோப் மற்றும் அய்வா நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று சனிக்கிழமை (14) மாலை அல் தாஜூன் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் என்.சீ.அன்சார் தலைமையில் நடைபெற்றது.

32 விளையாட்டுக் கழகம் பங்கு கொண்ட இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நற்பிட்டிமுனை பிறைவர் விளையாட்டுக் கழகமும் வேப்பையடி உதையா விளையாட்டுக் கழகமும் தெரிவாகின.

இறுதிப்பொட்டியில் நற்பிட்டிமுனை பிறைவர் விளையாட்டுக் கழகம் 6 ஒட்டங்களால் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக மை ஹோப் மற்றும் அய்வா சர்வதேச நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் லயன் சித்தீக் நதீர் எம்.ஜே.எப் கலந்து கொண்டார். அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் கணக்காளர் லயன் கே.றிஸ்வி யஹ்ஷர், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாவிதன் வெளிபிரதேச கொள்கைபரப்பச் செயலாளரும் நாடாளுமன்ற உறப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நாவிதன் வெளி பிரதேச இணைப்பாளர் ஏ.எம்.மஹ்றூப், அம்பாறை மாவட்ட சமுர்த்தி வங்கி மகாசங்க மேற்பார்வை அதிகாரி முஹம்மட் ஹனீபா உட்பட பலர் கலந்த கொண்டனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களை அதிதிகள் வழங்கி வைத்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .