2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கொம்புமுறி விளையாட்டு

Kanagaraj   / 2014 ஜூன் 17 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன், வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு படுவான்கரை  பிரதேசத்தில்    17  வருடங்களின்  பின்பு    கொம்புமுறி  விளையாட்டு   இடம்பெற்றுள்ளது.

பட்டிப்பளை  பிரதேச  செயலாளர்    சிவப்பிரியா   வில்வரெட்னம், முனைக்காடு  கண்ணகை அம்மன்   ஆலய முன்றலில்  சனிக்கிழமை(14) இவ்விளையாட்டினை ஆரம்பித்து வைத்தார்.

1945 ஆம் ஆண்டு    மட்டக்களப்பு  மாவட்டத்தின்   படுவான்கரை  பிரதேசத்தில்   கொம்புமுறி  விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் 1997 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்றிருந்தது.

17 வருடங்களுக்கு பின்னர்  பட்டிப்பளை   பிரதேச  செயலகம் மற்றும்  பிரதேச  கலை  கலாச்சார   பேரவை என்பன இணைந்து இவ்விளையாட்டினை ஏற்பாடு செய்திருந்தன.

தந்தை  வழி மரபான   சேரி,  வடசேரி, தென்சேரி   என  பிரிக்கப்பட்டு  2   அணிகள்  விளையாட்டில்  பங்குபற்றின.

4  மணி நேரம்   இடம்பெற்ற   கொம்புமுறி விளையாட்டினை  ஆயிரக்கணக்கான  மக்கள்    ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

ஆலயபூசை வழிபாடு, வைபவரீதியாக  கலாச்சார  மரபுடன்  ஆரம்பித்தல், கொம்பை   இரு அணியினரும்  எடுத்துச்செல்லல், கொம்பை  மரக்குற்றிகளுடன்   இணைத்துக்கட்டல்,  இறுக்குதல், ஆப்பு அடித்தல், செவ்வாய்க்குற்றியான   பனைமரத்தை உயர்த்துதல், இரு அணியினரும்   இழுத்தல்   போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது தென்சேரியின்   கொம்பு  முறிந்த  நிலையில்  வடசேரி   வெற்றி  பெற்றமை குறிப்பிடத்தக்கது.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .