2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியன்

Super User   / 2014 ஜூன் 22 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.குகன்


சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 120 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்திய அணிக்கு 5 பேர் கொண்ட 'புட்சால்' கால்பந்தாட்டப் போட்;டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியனாகியது.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (21) விலகல் முறைப்படி இடம்பெற்றதுடன் இச் சுற்றுப்போட்டியில் யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவின் 8 கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் இளவாலை ஹென்றியரசர் அணி 3:2 என்ற கோல்கள் கணக்கில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியினையும், ஊர்காவற்றுறை சென். அன்ரனீஸ் அணி 3:1 என்ற கோல்கள் கணக்கில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணியினையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இறுதிப்போட்டியில் இளவாலை ஹென்றியரசர் அணி 3:0 என்ற கோல்கள் கணக்கில் ஊர்காவற்றுறை சென். அன்ரனீஸ் கல்லூரி அணியினை வீழ்த்திச் சம்பியனாகியது,

மூன்றாமிடத்திற்கான போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 3:1 என்ற கோல்கள் கணக்கில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணியினை வென்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கான கேடயங்கள் கல்லூரியின் 120ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்ட தினம் அன்று வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X