2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். பல்கலை, அரியாலை ஜக்கியம் அணிகள் சம்பியன்

Super User   / 2014 ஜூன் 22 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}



                                                                                                                                                         
அரியாலை ஜக்கிய அணி          
-கனகரத்தினம் கனகராஜ்


யாழ். அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடத்திய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பெண்களில் அரியாலை ஜக்கிய அணியும், கலப்பு அணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும் சம்பியனாகின.

இந்தச் சுற்றுப்போட்டி அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் சனிக்கிழமை (21) இடம்பெற்றது.

பலம்மிக்க பல்கலை அணியினை இறுதிச் சுற்றுவரை போராடி வென்ற அரியாலை ஜக்கியம்

பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 9 கழகங்களின் அணிகள் பங்குபற்றியிருந்தன.
இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியினை எதிர்த்து அரியாலை ஜக்கிய அணி மோதியது.

நான்கு சுற்றுக்களாக (ஒவ்வொன்றும் 15 நிமிடங்கள்) நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் முதற் சுற்றினை அரியாலை ஜக்கிய அணி 15:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. இரண்டாவது சுற்று 12:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் முடிவடைந்தது.

மூன்றாவது சுற்றினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 11:09 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்ற, போட்டி விறுவிறுப்படைந்தது.
எனினும் நான்காவது சுற்றில் தமது முழுப்பலத்தினையும் வெளிப்படுத்திய அரியாலை ஜக்கிய அணி 15:11 அடிப்படையில் வென்றது.

இறுதியில் அரியாலை ஜக்கிய அணி 51:45 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

தனித்துவமான ஆட்டத்தின் மூலம் ஒரு புள்ளியினால் வெற்றிபெற்ற பல்கலை அணி

கலப்பு (ஆண் - பெண்) அணிகளில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 4 வலைப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.
இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும் அரியாலை ஜக்கிய அணியும் மோதின.

இரண்டு சுற்றுக்களாக (ஒவ்வொன்றும் 20 நிமிடங்கள்) நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதற்சுற்றினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 17:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.

இருந்தும், இரண்டாவது சுற்றில் மிகுந்த போராட்டத்தினை வெளிப்படுத்திய அரியாலை ஜக்கிய அணி 15:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. எனினும் மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 28:27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி

கலப்பு அரியாலை ஜக்கிய அணி

கலப்பு  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X