2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நகர பிதா வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது லிவர்பூல் அணி

Kanagaraj   / 2014 ஜூன் 22 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம்  கால்ப்பந்தாட்ட லீக் கலகத்தினால்  நடாத்தப்பட்ட நகர பிதா வெற்றி கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட  தொடரில் புத்தளம் லிவர்பூல் அணி  சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இந்த  தொடரின் இறுதிப்போட்டி புத்தளம் கிறா தேசியக்கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை  மாலை இடம்பெற்றது. நொக் அவுட் முறையிலான  இந்த போட்டி தொடர வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்  ஏ.எச்.எம். ரியாஸின் தலைமையில் ஏற்கனவே நடாத்தப்பட்டு இறுதிப்போட்டி கிடப்பில் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலே  இறுதி  போட்டி  கடந்த  சனிக்கிழமை  நடாத்தப்பட்டது. இத்தொடரில் லிவர்பூல் அணியை  தில்லையடி  நியூ பிரண்ட்ஸ் அணி எதிர்த்தாடியது. இரண்டு அணிகளும் போட்டி முடியும் வரை கோல்கள்  போடத  நிலையில்  வெற்றியை   தீர்மானிப்பதற்காக  தண்ட உதை தீர்மானிக்கப்பட்டது.

தண்ட  உதையின்  போது  லிவர்பூல் அணி 5:4  என்ற  அடிப்படையில்  போட்டியில்  வெற்றி  பெற்றது. போட்டியில்  நடுவர்களாக எம். எஸ்.எம். நௌபி, எம்.ஏ.எம். பஸ்ரின், ஏ.ஓ.எம் அஸாம் ஆகியோர் செயற்பட்டனர்.

இந்த  இறுதிப்போட்டியில்  புத்தளம்  நகர  முதல்வர்  கே.ஏ. பாயிஸ்  பிரதம  அதிதியாக  கலந்து  கொண்டார். லீக் தலைவர் எச். எம். சபீக், இலங்கை கால்பந்தாட்ட  சம்மேளன  பொருளாளரும், புத்தளம்  கால்பந்தாட்ட லீக் செயலாளருமான ஜே. எம். ஜௌசி உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X