2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சாரண மாணவர்களுக்கு அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை(24) சாரண மாணவர்களுக்கு அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலை சாரண ஆசிரியர்களான நா.குருச்சந்திரராசா, அ.இராமேஸ்வரன் அ.சுபோதினி, ஆகியோரால் வழிநடத்தப்பட்ட 24 அங்கத்தவர்களுக்கு அங்கத்துவ சின்னம் மற்றும் கழுத்துப்பட்டிகள் என்பன இதன்போது அணிவிக்கப்பட்டன.

வித்தியாலய சாரண ஆசிரியர் நா.குருச்சந்திரராசா தலைமையிலும் வித்தியாலய அதிபர் பொ.நேசதுரையின்  வழிகாட்டலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் பு.ஆனந்தராசா,  உதவி மாவட்ட சாரண ஆணையாளர் வ.சுப்பிரமணியம் மாவட்ட சாரணிய அணிகளின் தலைவர் பொ.மேகவண்ணன், பாடசாலை சாரண ஆசிரியர் அ.இராமேஸ்வரன், அ.சுபோதினி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X