2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாஞ்சி சாம்பியன்ஸ் போர்

Super User   / 2014 ஜூன் 27 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட். களுவாஞ்சிகுடி மிலேனியம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற"BATTLE OF VANCHI CHAMPIONS" மாபெரும் கிறிக்கட் சுற்றுப் போட்டி கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (23,24 ) களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

இப் போட்டிகள் லீக் முறையில் இடம்பெற்றதுடன், நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம், இளஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகம், மிலேனியம் விளையாட்டுக் கழகம், மக்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய பலம் வாய்ந்த நான்கு அணிகள் பலப் பரீட்சை நடத்தின.

லீக் முறையில் இடம்பெற்ற இப் போட்டியில் நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் மக்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று நீண்ட நாட்களின் பின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது ஏனைய இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.

அவ்வாறே இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகம், நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்திற்கெதிரான போட்டியில் வெற்றி பெற்று ஒரு வெற்றியுடன் ஏனைய இரு போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது.

இறுதிப் போட்டிக்காக தலா இரு வெற்றிகளைப் பெற்ற மிலேனியம் விளையாட்டுக் கழகம் மற்றும் மக்ஸ் விளையாட்டுக் கழகங்கள் தெரிவு செய்யப்பட்டன.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மிலேனியம் 94 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடிப்பெடுத்தாடிய மக்ஸ் 94 ஓட்டங்களைப் பெற போட்டி சமநிலையில் முடிவுற்றதையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிகமாக சூப்பர் ஓவர் வழங்கப்பட வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திய மக்ஸ் கழகம் இரண்டாவது தடவையாக களுவாஞ்சிகுடி மண்சார்பில் தங்கள் வெற்றியினைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக மக்ஸ்சின் மாணிக்கராஜ்யும் தொடரின்  சிறப்பாட்டக்காரராக மிலேனியம் கழகத்தின் ஜெயசாந்தும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது அத்துடன் மிலேனியம் விளையாட்டுக் கழகத்தின் வளர்ந்து வரும் வீரர்களுக்கான கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X