2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுவாமி விபுலானந்தர் நினைவு தின கிரிக்கட் சுற்றுப் போட்டி

Kanagaraj   / 2014 ஜூன் 28 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

சுவாமி விபுலானந்தர்  நினைவு தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் ஏற்பாடு செய்திருந்த பட்டமுன் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கு பற்றும் கிரிக்கட் சுற்றுப் போட்டி சிவானந்தா  தேசிய பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
இந் நிகழ்விற்கு கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் கலாநிதி.கிட்ணன் கோவிந்தராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஏ.ஜே.கிறிஷ்டி உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
 
இங்கு SVIAS HARMONY,  SVIAS CHALLENGERS,  SVIAS ELEVATION, SVIAS RHYTHMS,   SVIAS CREATION ஆகிய அணிகளுக்கிடையே கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது.
 
இதன்போது முதலாம் இடத்தை  SVIAS CHALLENGERS அணியினரும், இரண்டாம் இடத்தை SVIAS RHYTHMS அணியினரும் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதியில்   SVPLஇன் ஞாபகார்த்த கிண்ணங்கள் அணுசரனை வழங்கியவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X