2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாணச் சம்பியனாகிய யாழ்ப்பாணக் கல்வி வலயம்

Super User   / 2014 ஜூன் 29 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                                                                                     யாழ்ப்பாணம் கல்வி வலயம்
- குணசேகரன் சுரேன்                                                                                                                 

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் யாழ்ப்பாணக் கல்வி வலயம் 1175 புள்ளிகள் பெற்றுச் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்;டுப் போட்டிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வந்தன.

ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பமான மேற்படி போட்டிகளின் முதலாம், மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்திலும், நான்காம் கட்டப் போட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைபெற்று முடிந்தன. (பெரு விளையாட்டுக்கள்)

தொடர்ந்து தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் கடந்த 23ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வந்தது.

தடகள மற்றும் மைதான நிகழ்வுகளில் கடந்த காலங்களில் நிலைநாட்டப்பட்ட 51 சாதனைகள் இம்முறை வீர, வீராங்கனைகளால் முறியடிக்கப்பட்டன.

இவற்றில் ஆண்களுக்கான போட்டிகளில் 31 சாதனைகளும் பெண்களுக்கான போட்டிகளில் 20 சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

போட்டிகளில் வெற்றிபெற்ற வலயங்கள் மற்றும் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த பெரு விளையாட்டுக்கள், தடகள மற்றும் மைதான நிகழ்வுகளின் மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் யாழ்ப்பாணம் கல்வி வலயம் 1175 புள்ளிகள் பெற்று முதலிடத்தினையும், வலிகாமம் கல்வி வலயம் 800 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தினையும், வடமராட்சிக் கல்வி வலயம் 550 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றன.

வெற்றிபெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கான கேடயங்களை வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா வழங்கிவைத்தார்.

வடமராட்சிக் கல்வி வலயம்

வலிகாமம் கல்வி வலயம்

தடகள மற்றும் மைதான நிகழ்வுகளில் வலயங்களின் நிலைகள்

பெரு விளையாட்டுக்களில் வலயங்களின் நிலைகள்

மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் வலயங்களின் நிலைகள்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X