2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டி

Super User   / 2014 ஜூலை 01 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


தேசிய விளையாட்டு விழாவின் போது நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கிழக்குமாகாண அணி வெற்றி பெற்று வரலாற்றுச் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

40ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (29) கொழும்பு விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் கிழக்குமாகாண அணியும் சப்ரகமுவ மாகாண அணியும் மோதிக்கொண்டன.

அணிக்கு 11பேர் கொண்ட 15 பந்துப்பரிமாற்றங்களாக மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சப்ரகமுவ அணி 12 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகம்கொடுத்து சகல விக்கட்களையும் இழந்து 31 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

32ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 5 பந்துப்பரிமாற்றங்களில் 1 இலக்கை இழந்து 35 ஓட்டங்களை மிக இலகுவாகப் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது. இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாக கிழக்குமாகாண அணியின் என்.நிக்சி அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.

40ஆவது தேசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரகடனப்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச அணி பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றி கிழக்கு மாகாணத்திற்கு பெருமையையும், கௌரவித்ததையும் முதன் முதலாக சேர்ந்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (01) அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன் தலைமையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இவ்வரவேற்பு விழாவில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு கழகங்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், பாராட்டினையும் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X