2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி : நாகர் கழகம் சம்பியன்

Super User   / 2014 ஜூலை 01 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


- தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக நடாத்திய படுவான்கரை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டின் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் இச் சுற்றுப் போட்டியில் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள அனைத்து கழகங்களும் பங்குபற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆண்டுக்கான போட்டிகள் நடைபெற்றுவந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை (29) இறுதிப்போட்டி முனைக்காடு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுடன் இறுதிப்போட்டியில் படுவான்கரையின் பலம் வாய்ந்த அணிகளான பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக்கழக அணியும் பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழக அணியும் மோதிக்கொண்டன.

பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழகம் 1.0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப் போட்டியின் நடுவர்களாக மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நடுவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிப்பணிப்பாளர் சிறிநேசன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற அணிகான மற்றும் சிறந்த வீரர், தொடரின் சிறந்த வீரர் ஆகியோருக்கான வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X