2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சேனைக்குடியிருப்பு மாணவர், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Super User   / 2014 ஜூலை 02 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ஏ.எஸ்.எம்.முஜாஹித்


சேனைக்குடியிருப்பு இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்னவின்  50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (02) சேனைக்குடியிருப்பு மைதானத்தில் நடைபெற்றது.

வின்னர் விளையாட்டுக் கழக ஆலோசகர் த.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்ன, அம்பாரை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் நிஹால் சிறிவர்த்தன, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான எம்.றியாஸ், கல்முனை நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.திலகராஜா உட்பட விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதவேளை கடந்த பல வருடங்களாக சேனைக்குடியிருப்பு பிரதேசத்திற்கென தனியான பொது விளையாட்டு மைதானம் இன்மையால் விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைக்கு அங்கு விஜயம் செய்த நீர்ப்பாசன அதிகாரிளுடன் அமைச்சர் கலந்துரையாடி தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X