2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் புனித மைக்கல் கல்லூரிக்கும் இடையில்  98 ஆவது பாடுமீன்களின் சமர் கடினப் பந்து கிரிக்கெட் போட்டி இன்று கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (5) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இக் கிரிக்கெட் போட்டியின்  நிகழ்வுகள் ஹட்டன் நெஷனல் வங்கி  மற்றும் கல்லூரியின்  பழைய மாணவர் சங்க இணை அனுசரணையில் மிக கோலாகலமாக இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர்  எம்.குருகுலசிங்கம்,  மத்திய கல்லூரி அதிபர்  விமல்ராஜ், மைக்கல் கல்லூரி அதிபர் திருமதி மாசிலாமணி, அருட்தந்தை ரஜீவன், கல்லூரி பழைய மாணவ சங்க செயலாளர் கோபிநாத், ஆகியோருட்பட இன்னும் பலர் அதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களை  பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மைக்கல் கல்லூரி அணி  சகல விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

போட்டியின் 53 ஓட்டங்களினால்   மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகவும் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிகொண்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .