2025 நவம்பர் 19, புதன்கிழமை

வலல ஏ.இரத்நாயக்கா மத்திய கல்லூரி சம்பியன்

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் வத்துகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட   வலல ஏ.இரத்நாயக்கா மத்திய கல்லூரி 17ஆவது வருடமாகவும் சம்பியனாக தெரிவானது.

கடந்த ஐந்து நாட்களாக கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு, மைதான மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகள் வார இறுதி நாட்களில் நிறைவடைந்தன.

பரிசளிப்பு வைபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள வலல ஏ. இரத்நாயக்கா மத்திய கல்லூhரி மொத்தம் 617 புள்ளிகளைப் பெற்று 17 ஆவது வருடமாக தொடர்ந்தும் சம்பியனானது.

214 புள்ளகளைப் பெற்ற அம்பகமுவ மத்திய கல்லூரி பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் 162 புள்ளிகளைப் பெற்ற கண்டி மகாமாயா கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுகொண்டன.

ஆண்கள் பிரிவில் 247 புள்ளகளைப் பெற்று வலல ஏ.இரத்நாயக்கா மத்திய கல்லூரி தொடர்ந்து 17 வது வருடமாகவும் முதலாம் இடத்தையும் 237 புள்ளிகளைப் பெற்று கண்டி திருத்துவக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் 85 புள்ளிகளைப் பெற்ற கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுகொண்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X