2025 நவம்பர் 19, புதன்கிழமை

கனகபுரம் விளையாட்டுக்கழகத்தின் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Super User   / 2014 ஜூலை 09 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    எஸ்.அரசரட்ணம்

கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாவருடம் நடத்தப்படும் மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி கனகபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில்  செவ்வாய்க்கிழமை (08) ஆரம்பமாகியது.

அணிக்கு 9 பேர் கொண்ட மேற்படி கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 40 கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றுகின்றன.

இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாகும் அணிக்கு 20 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கேடயமும் இரண்டாவதாக வரும் அணிக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கேடயமும் வழங்கப்படவுள்ளன.

மேற்படி விளையாட்டுக் கழகத்தினால் வருடாவருடம் நடத்தப்பட்டு வந்த இந்த கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நாட்டில் ஏற்பட்ட போர்க்காலச் சூழ்நிலையைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இவ்வருடம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X