2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விமானப்படை பெண்கள் அணி வெற்றி

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பெண்கள் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியில், இலங்கை விமானப் படையின் பெண்கள் அணி வெற்றிபெற்றது.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற இந்த போட்டியில், வலிகாமம் கால்பந்தாட்ட லீக் அணியும் இலங்கை விமானப் படை அணியும் மோதிக்கொண்டன.

முதல் பாதியாட்டத்தில் விமானப்படையணி அடுத்தடுத்து 3 கோல்களைப் பெற்று முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டத்திலும் விமானப்படையணி ஆதிக்கம் செலுத்தி மேலும் 4 கோல்களைப் போட்டது.

இறுதியில், விமானப்படையணி 7:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .