2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி

Super User   / 2014 ஜூலை 14 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



-    செல்வநாயகம் கபிலன்

நீர்வேலி மாட்டுவண்டிச் சவாரித் திடலில் நடத்தப்பட்ட மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியில் அளவெட்டியினைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவஞானம் என்பவரின் மாடுகள் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.

இரண்டை மாடுகளை கொண்ட இந்தப்போட்டி, யாழ். மாவட்ட மாட்டுவண்டிச் சவாரிச் சங்கத்தின் ஏற்பாட்;டில் 14 ஆவது வருடமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் மொத்தமாக 16 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இதில், நவக்கிரியைச் சேர்ந்த அரியகுட்டி கோபாலன் என்பவரது மாடுகள் இரண்டாமிடத்தையும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த செல்வநாயகம் ராஜ்கரன் என்பவரது மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

யாழ். மாவட்டத்தில், பொன்னாலை மான்பாஞ்சான் வெளி, வட்டுக்கோட்டை கொக்குத்திடல், நீர்வேலி சவாரித்திடல், நவாலி கொட்டுக்கட்டி, கீரிமலை கருகும்பனை, வடமராட்சி அந்தணத்திடல் போன்ற இடங்களில் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .