2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் சம்பியன்

Super User   / 2014 ஜூலை 14 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-   குணசேகரன் சுரேன்


கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டுக்கழகம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய அணிக்கு 9 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.

கடந்த 8 ஆம் திகதி முதல் கனகபுரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வந்த மேற்படி சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 40 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

விலகல் முறையில் இடம்பெற்ற இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஜெயந்திநகர் விளையாட்டுக்கழகம் மோதியது.

இதில், உருத்திரபுரம் விளையாட்;டுக்கழகம் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

சம்பியனான அணிக்கு 20 ஆயிரம் ரூபா பணப்பரிசிலும், கேடயமும். 2 ஆம் இடம்பெற்ற அணிக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசிலும் கேடயமும் வழங்கப்பட்டன. 

மேற்படி விளையாட்டுக் கழகத்தினால் வருடாவருடம் நடத்தப்பட்டு வந்த இந்த கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நாட்டில் ஏற்பட்ட போர்க்காலச் சூழ்நிலையைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இவ்வருடம் மீண்டும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .